மதுரை நவ, 30
மதுரை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அறிவுரைப்படி மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படி மதுரை பள்ளிக் கல்வித்துறை உதவி யுடன் நவம்பர் 14 ம்தேதி குழந்தைகள் தினம் அன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பாக மாணவ-மாணவிகள் இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை, அனை வருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் குழந்தைகளை வேலை செய்ய அனுமதிக்கும் பெற்றோருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க இயலும். எனவே குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தப்படுவது பற்றி ஏதேனும் தெரியவந்தால் தொழிலாளர் துறை, சைல்டு லைன் (1098), பென்சில் போர்ட்டல் (www.pencil.gov.in) ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.