மதுரை டிச, 1
வாடிப்பட்டி யூனியன் குட்லாடம்பட்டியில் 6 மாநில ரெட்டி நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி சக்தி மருத்துவமனை இணைந்து எலும்புமூட்டு நோய் மற்றும் மகப்பேறு நோய்க்கான இலவச மருத்துவமுகாம் நடந்தது. யூனியன் நகர் மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா தலைமை தாங்கினார்.
மேலும் சங்க தலைவர் வைத்தியலிங்கம் தொடங்கி வைத்தார். ஆலோசகர் பட்டாபிராமன், துணைத் தலைவர் செல்வகுமார், வழக்கறிஞர் கிருபாகரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கதிரவன் வரவேற்றார். அகில இந்திய ரெட்டி நல சங்க பொருளாளர் முரளிராமசாமி, திருமங்கலம் மோனிகா சதீஷ், கார்த்திக் செல்வம் ரங்கசாமி, பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர். மருத்துவர்கள் வெங்கடேஷ் பாபு, சுமதி தலைமையில் மருத்துவகுழுவினர் 345 பேருக்கு மருத்துவஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.