மதுரை நவ, 28
தி.மு.க. மாநில இளைஞ ரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் முன்சீப் நீதிமன்ற சாலையில் ராஜாஜி தெரு சந்திப்பில் 45 கிலோ கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடினர்.
விழாவை முன்னிட்டு சிறுவர்- சிறுமியர் மற்றும் ஏழை- எளியவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகரசபை தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை சேர்மன் ஆதவன் அதியமான், இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத் தலை வர் நாகராஜன், நகர அவைதலைவர் சேட், துணைச் செயலாளர் செல்வம், வழக்கறிஞர்கள் தங்கச்சாமி, தங்கேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.