மதுரை நவ, 27
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபதிருவிழா நாளை தொடங்கி டிசம்பர் 7 ம்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நாளை பகல் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.