கடலூர் நவ, 29
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, செவிலியர் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வந்தது. இக்கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று, கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றம் செய்தது.
அதனடிப்படையில் இந்த மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு சீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்தநிலையில் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்களுக்கு கடந்த அக்டோபர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், ஊதியம் வழங்கக்கோரியும் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள், முட நீக்கியல் வல்லுனர்கள் நேற்று காலை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து பதாகைகளை ஏந்தியபடி பல்கலைக்கழகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.