திருவண்ணாமலை நவ, 29
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் தீபம் ஏற்ற பயன்படுத்த கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆவின் நெய் 4,500 கிலோ கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர் 6ம் தேதி அன்று 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை மீது ஏற்றப்படும் தீபத்திற்கு தொடர்ந்து 11 நாட்கள் இந்த நெய் பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆயிரம் கிலோ கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்று வகையில் கோவிலில் நெய் காணிக்கையை செய்து வருகின்றனர்.