இந்தோனேசியா நவ, 27
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அளவுகோலில் 5.6 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து நடந்த மீட்பு பணிகள் மூலம் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை நீக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பலி எண்ணிக்கை தற்போது 318 ஆக அதிகரித்துள்ளது.