இத்தாலி நவ, 28
இத்தாலியில் கனமழையில் சிக்கி பிறந்த குழந்தை உட்பட ஏழு பேர் பலியாகி உள்ளனர். இஷியா தீவில் உள்ள காசாமிச்சியோலா நகரில் கடந்த சில ஆண்டுகளாக கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி ஏற்கனவே எட்டு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வந்த நிலையில் தற்போது மேலும் ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.