சிவகங்கை நவ, 27
காரைக்குடி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொன்நகரில் நியாய விலைக்கடை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்தனர். சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் ஆகியோரின் முயற்சியால் பொன்நகரில் பகுதிநேர நியாய விலைக் கடைதிறக்கப்பட்டது.
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி ரேசன் கடையை திறந்து வைத்தார். சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, குடிமைப்பொருள் தாசில்தார் ஜெயநிர்மலா, பொன்.துரைசிங்கம், செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.