தஞ்சாவூர் நவ, 27
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் மலர்விழி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் கோடீஸ்வரன், மாவட்ட புள்ளியியல் உதவியாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.