திருப்பத்தூர் நவ, 27
திருப்பத்தூர் அடுத்த சீரங்கப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு வகுப்பறைகள் தேவை என பொதுமக்கள் சட்ட மன்ற உறுப்பினர் நல்லதம்பியிடம் கோரிக்கை வைத்தனர்.
எனவே பள்ளியில் கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்ட ரூ.16.50 லட்சம் மதிப்பில் சட்ட மன்ற உறுப்பினர் நல்ல தம்பி தனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ஒதுக்கி பூஜை செய்து பள்ளி கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் விஜியாஅருணாச்சலம் துணைத் தலைவர் ஞானசேகரன், மாவட்ட பிரதிநிதி சரவணன், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் துணை தலைவர் மதி நன்றி கூறினர்.