Spread the love

கோயம்புத்தூர், 26

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன.

ஆதார் இணைப்பு தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் அளித்த பேட்டியில், எதிர்கட்சிகள் அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆதார் எண் இல்லை என்றாலும் தற்போது கட்டணம் செலுத்தலாம். தவறான தகவலை பரப்ப வேண்டாம். ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. கண்டிப்பாக 100 சதவீதம் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். மின்சார துறையை சீர்திருத்தம் செய்யும் போது ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின்சார வாரியத்தை புதிய பரிணாமத்தோடு மேம்படுத்த முடியும் எனஅவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *