கோவை நவ, 29
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு தக்காளி, கத்தரி, வெண்டை, உள்பட பல்வேறு வகையான காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கோவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சந்தையில் தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைக்கு தொண்டா–முத்தூர், நாச்சிபாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் தக்காளி விற்பனைக்கு வரும். தற்போது சந்தைக்கு அதிகளவிலான தக்காளி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. கடந்த 1½ மாதத்திற்கு முன்பு வரை சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையாகி வந்தது. தற்போது உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10ல் இருந்து ரூ.13 வரை விற்பனையாகிறது. தக்காளிக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.