கோயம்புத்தூர் நவ, 24
கார்த்திகை மாதம் பிறந்ததால் பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தமாக நடைபெற்றது. மாட்டு சந்தை பொள்ளாச்சியில் மாட்டு சந்தை வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறும். சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இங்கு வரும் மாடுகளை உள்ளுர் விவசாயிகள், வியாபாரிகளும் வாங்கி செல்வார்கள். இதை தவிர கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது. இதற்கிடையில் கார்த்திகை மாதம் பிறந்ததால் விற்பனை மந்தமானது.