அரியலூர் நவ, 26
ஜெயங்கொண்டத்தில் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை உடையார்பாளையம்
மாவட்ட வருவாய் அலுவலர் பரிமளம் துவக்கி வைத்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை மற்றும் ஜனவரி 1 முதல் 2023 அன்று அல்லது அதற்கு முன்பு உள்ளவர்களுக்கு 18 வயது பூர்த்தியாக இருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் பேரணியில் வலியுறுத்தி சென்றனர்.
பேரணியில் ஜெயங்கொண்டம் வட்டாச்சியர் துரை, வருவாய் ஆய்வாளர் செல்வ கணேசன், கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி அண்ணா சிலையில் இருந்து ஜெயங்கொண்டம் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றுள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும்அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.