சென்னை நவ, 25
உலக நாயகன் கமல்ஹாசன் காய்ச்சல் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார் இரண்டு நாட்கள் வீட்டில் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.