தஞ்சாவூர் ஆகஸ்ட், 7
தஞ்சை ரெயிலடியில் இருந்து தஞ்சை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் ஏராளமான திமுகவினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினமான இன்று அமைதி ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை கலைஞர் அறிவாலயத்துக்கு வந்தனர். பின்னர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சிலை முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கும் மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் கருணாநிதி சிலை அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சட்ட மன்ற உறுப்பினர் நீலமேகம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, மாவட்ட பொருளாளர் அண்ணா, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இறைவன், ஜித்து, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வகுமார், கவுதமன், துணை செயலாளர் புண்ணியமூர்த்தி, யூனியன் சேர்மன் வைஜெயந்தி மாலா கேசவன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மேத்தா, உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in