வேலூர் நவ, 23
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை, பொருளாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சுமதி கலந்துகொண்டு பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ருக்மணி, மாவட்ட துணை தலைவர்கள் புவனேஸ்வரி, விஜியலட்சுமி, சசிகலா, தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இக்கூட்டத்தில், முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர், உதவியாளருக்கு ரூ.3 லட்சம் வழங்கிட வேண்டும். போர்க்கால அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சமையல் எரிவாயுவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர் அனைத்து கோரிக்கைகளையும் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளார். அதை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அனைத்து ஒன்றியங்களிலும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட உள்ளது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.