Spread the love

சிவகங்கை நவ, 22

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறு டிவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபக ரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 376 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 5 பள்ளி மாணவிகளுக்கும், 3 கல்லூரி மாணவிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *