அமெரிக்கா நவ, 21
அமெரிக்கா அதிபர் ஜோபைடனின், மூத்த மகன் ஹண்டரின் மகள் நவோமி பைடன். வாஷிங்டனில் வக்கீலாக இருக்கிறார். இவருக்கும் சட்டக்கல்லூரி மாணவருமான பீட்டருக்கும் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. 1812 இலிருந்து தற்போது வரை வெள்ளை மாளிகையில் இதுவரை 19 திருமண நிகழ்ச்சிகளை நடந்துள்ளன. நவோமியின் திருமணம் தான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.