துபாய் நவ, 20
ஐக்கிய அரபு அமீரக சைனா மால் (China Mall) அருகில் சென்னை கிங்ஸ் (Chennai Kings Restaurant) என்ற புதிய உணவகம் திறக்கப்பட்டது.
இத்திறப்பு விழாவிற்கு கௌரவ சிறப்பு விருந்தினர்களாக அமீரகத்தை சேர்ந்த ஷேக் அகமது பின் சுல்தான் பின் அலி அல்நய்மி, அலி செய்யது அலி மத்ரூசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்தைசேர்ந்த பி.எம்.குரூப் நிறுவனர் டாக்டர் கனகராஜ், துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், கேப்டன் டிவி முதன்மை நிருபர் கே.வி.எல் கமால், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் மற்றும் வணக்கம்பாரதம் வார இதழின் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, சர்வதேச வணிக அமைப்பின் தலைவர் அன்வர் அலி, செயலாளர் ஷாநவாஸ், ஷார்ஜா ராஜா, ரமேஷ் விசுவநாதன், ரமேஷ் ஜெயராமன், க்ரீன் குளோப் நிறுவனர் சமுக சேவகி ஜாஸ்மீன், எஸ்பிஎஸ் நிசாம், துபாய் டிக்டாக் புல்லிங்கோ புகழ் ஷாநவாஸ், அயாஸ், ஜனனி
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த உணவகத்தின் திறப்புவிழாவை முன்னிட்டு உணவகத்தின் உரிமையாளர்களான அன்வர் குழுமத்தின் நிறுவனர் அன்வர் அலி மற்றும் அஸ்கர் வந்திருந்த அனைவருக்கும் உணவு பரிமாறி உபசரித்து நன்றி கூறி கௌரவப்படுத்தினர்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.