அரியலூர் நவ, 21
அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் 100க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதை ஏலம் எடுத்தவர்கள் பலர் வாடகை செலுத்தாமல் நிலவை வைத்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆணையர் பலமுறை அவர்களுக்கு கடிதம் அனுப்பியும், நேரில் சென்று தகவல் தெரிவித்தும், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்து வந்தனர். இதையொட்டி ஒரு சிலர் தங்களது வாடகை நிலுவை தொகையை செலுத்தினர். இருப்பினும் 10-க்கும் மேற்பட்டோர் வாடகையை செலுத்தாமல் இருந்தனர்.
இதையடுத்து, அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள 2 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.