கிருஷ்ணகிரி நவ, 19
கிருஷ்ணகிரி அருகே உள்ள பச்சிக்கானப்பள்ளி கிராமத்தில் மின்குறைப்பாட்டினால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். அந்த பகுதியில் மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 11 கே.வி.யில் இருந்து 16 கே.வி. ஆக திறன் உயர்த்தப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நடந்தது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கலந்து கொண்டு, திறன் உயர்த்தப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மரை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதில் மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர்கள் கோவிந்தராஜ், கந்தசாமி மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், சோக்காடிராஜன், கண்ணியப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஜெயாஆஜி, ஜெயராமன், முன்னாள் பச்சிகானப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் சூரியா பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.