வேலூர் நவ, 19
பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் எச்.சி.எல். ஆகியவை இணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
இதற்கான தேர்வு முகாம் வேலூர் அரசு முஸ்லீம் பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி, வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்துடன் அவர்கள் உயர்கல்வி தொடர்வது குறித்து பேசினார். இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.