துபாய் நவ, 19
உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நாளை கோலாகலமாக நாளை தொடங்குகிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் அறிமுக விழா நாளை நடக்கிறது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.