Spread the love

மயிலாடுதுறை நவ, 18

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளான, நெல்லூர், சூரக்காடு, வேட்டங்குடி, நெப்பத்தூர், திருவாளி ஏரி, கருவி ஆகிய இடங்களை, மழையால் பாதிக்கப்பட்ட, மக்களையும், நெற்பயிர்களையும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.

சீர்காழி தரங்கம்பாடி பகுதிகளில், சம்பா தாளடி 87,000 ஏக்கர் நிலங்கள், மழையால் பாதிக்கபட்டும், 257 கிராமங்கள் மழைநீரால் சூழப்பட்டும் பாதிக்கபட்டு இருந்தது. இந்த பாதிப்புகளை பார்வையிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆக்கூர் அருகே தலையுடையவர் கோயில் பத்து கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கினார். மாமல்லபுரத்தில் கைவிடப்பட்ட மழை அளவிடும் பகுதி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது அவருடன், முன்னாள் அமைச்சர் மணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *