கன்னியாகுமரி நவ, 18
மீனவர் தினம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்பும் வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.
நாகர்கோவிலில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
உலக மீனவர் நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மீனவர் தினம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்பும் வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகாகோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கடலோர மற்றும் உள்நாட்டு மீனவர்களும் திரளாக மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.