சென்னை நவ, 16
தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வண்டலூர் பூங்கா உலகத்தரம் வாய்ந்த உயிரியல் பூங்காக்களில் ஒன்றாக விளங்குகிறது. இப்பூங்காவுக்கு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். மக்களுக்கும் வன உயிரின பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.
