நாகர்கோவில் நவ, 16
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
குமரி மாவட்ட ஊர்க்காவல் படையில் 20 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப வினியோகம், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று, இன்றுமாலை 5 மணிக்குள், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.