Spread the love

கிருஷ்ணகிரி நவ, 15

தளி தொகுதி தேன்கனிக்கோட்டை அடுத்த கொரட்ட கிரியில் 6 கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிகளால் அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைவதாகவும், பொது மக்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதியுள்ளாவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கல்குவாரிகளில் உள்ள கனரக வாகனங்கள், லாரிகள் அந்த கிராமத்தில் வழியாக சாலையில் செல்லும் போதும் பள்ளி குழந்தைகள் சத்தத்தினால் படிக்க இயலவில்லை. கல்குவாரிகளில் கல் உடைக்க வைக்கும் வெடி வெடிப்பதன் மூலம் அதிகபடியான சத்தம், நச்சு காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு கர்ப்பிணி பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

கல்குவாரிகளில் இருந்து வரும் லாரிகள் கிராமத்தின் வழியாக செல்வதை தடுக்க வேண்டும். இதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியவில்லை என ஊர் பொதுமக்கள் அரசு அலுவலர்களை பலமுறை சந்தித்து மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஊரை விட்டு வெளியேறி ஊருக்கு வெளியே காட்டில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 5-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உடனடியாக மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *