சென்னை நவ, 15
எதிர்க்கட்சிகளின் வீண் விமர்சனங்களை பற்றி கவலை இல்லை அரசின் நடவடிக்கையால் மக்கள் திருப்தியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இபிஎஸ் ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் எதிர்க்கட்சியின் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக, அரசியல் செய்வதற்காக அப்படி கூறுவார்கள். கணக்கெடுப்பு எடுத்து அதன்படி நடவடிக்கை இருக்கும் என்றார்.