சென்னை நவ, 14
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மழை அலர்ட் கொடுக்கப்பட்டாலும் மயிலாடுதுறையை தவிர மற்ற மாவட்டங்கள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.