திண்டுக்கல் நவ, 14
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்த நிலையில் கடந்த 1 வாரமாக பெய்த கனமழையால் மேலும் சேதமடைந்தது.
எனவே மழை மற்றும் பாலப்பணிகளால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
அனுமந்தநகர்-பாலகிருஷ்ணாபுரம் இணைப்புச்சாலையை செப்பணிட வேண்டும். கட்டி முடித்த சுரங்கப்பாதைகளை உடனே திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பாலகிருஷ்ணாபுரத்தில் வாழைக்கன்று நடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமை வகித்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் அஜய்கோஸ், சரத்குமார், ஜீவானந்தம், செல்வநாயகம், ஜீவானந்தினி, ஜோசப், செல்வகணேசன் உள்பட ஏராளமானோர் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் இதில் கலந்து கொண்டனர்.