தருமபுரி நவ, 13
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இச்சேவையில் பணிபுரிய ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆட்சேர்ப்பு முகாம் வருகின்ற 15 ம்தேதி அன்று தருமபுரி மாவட்ட பெரியார் மன்றத்தில் நடைபெற உள்ளது. தகுதியுள்ள ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த திட்ட மேலாளர் ரஞ்சித் மற்றும் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.