காஞ்சிபுரம் நவ, 11
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023-க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டார். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலை காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா பெற்றுக் கொண்டார்.