தேனி நவ, 9
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அளிப்பதினை நிறுத்த வேண்டும் என்றும், தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல் படுத்த வேண்டும் என்றும், அகல விலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்றும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை கவனித்து உரிய காப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும்,சிபிஎஸ்சை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் செவிலியர்கள் ஊர் புறா நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தர படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்றும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.