திண்டுக்கல் நவ, 8
சாணார்பட்டி ஒன்றியம், கணவாய்ப்பட்டி கிராமம் கொரசின்னம்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் 9 ஆடுகள் பரிதாபமாக இறந்தது.
இது சம்பந்தமாக கணவாய்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரவீன்குமார் தலைமையில் அழகர்கோவில் வனசரகம் வனச்சரகர் குமார்,வன பாதுகாவலர் மகேந்திரன்,வன காவலர் ஜெயராம், வனவர் சிவகாமி ஆகியோர் முன்னிலையில் கோபால்பட்டி அரசு கால்நடை மருத்துவர் முருகானந்தம் உடற்கூறாய்வு பரிசோதனை செய்தார்.