செங்கல்பட்டு நவ, 8
அனகாபுத்தூரில் பிரபல தியேட்டர் உள்ளது. பட இடைவேளையின் போது திரையரங்கத்தில் உள்ள கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 4 வாலிபர்கள் ‘பாப்கான்’ டப்பாவை திருடி சென்று விட்டனர். இந்த வீடியோ காட்சியை தியேட்டர் நிர்வாகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.
மேலும் பாப்கான் திருடர்களை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானமாக ஒரு பாப்கான் கொடுக்கப்படும் என்று தியேட்டர் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வேடிக்கையான நிகழ்வு மக்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.