கரூர் நவ, 3
கரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஷ் புகழூர் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த ஆய்வின் போது தீ விபத்து குறித்த பதிவேடுகள், தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டு இருந்த விவரம், மற்றும் பல்வேறு விபத்துகளில் தீயணைப்பு வீரர்கள் பங்கு பெற்றது குறித்து விவரங்கள், அதேபோல் உதவி அழைப்புகளுக்கு சென்று பணியாற்றி விவரங்கள், தீயணைப்பு கருவிகளான நீர் தாங்கி வண்டி, மிதிவண்டி, லைபாய், லைப் ஜாக்கெட், பவர் ஷா, நீர் குழாய் உள்ளிட்ட பல்வேறு தீயணைப்பு கருவிகளையும் ஒவ்வொன்றாக வரிசைப்படி தரமாக உள்ளதா, தரமற்றதாக உள்ளதா, பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
அதேபோல் பல்வேறு பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி மற்றும் முன்னணி தீயணைப்பு வீரர்கள் உடன் இருந்தனர்.