தர்மபுரி நவ, 3
தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். ஆட்டோ தொழிலாளர் சங்க தலைவர் ராஜகோபால் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். வீதிமீறல் என்ற பெயரில் அபராத உயர்வு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் ‘ஸ்பாட் பைன்’ என்ற பெயரில் டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.