காஞ்சிபுரம் நவ, 2
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 280 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 7 விடுதி துப்புரவு பணியாளர்களுக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சிவருத்ரய்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி, துணை ஆட்சியர் சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.