சேலம் நவ, 1
தமிழகத்தில் அரிசி, கோதுமை, பருப்பு, மண்எண்ணை போன்ற உணவுப் பொருட்களை ரேசன் கடைகள் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 1972-ம் ஆண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நிறுவப்பட்டது.
இதற்காக மாநிலம் முழுவதும் பொருட்களை பாதுகாத்து இருப்பு வைத்து விநியோகிக்கும் வகையில் கிடங்குகள் உருவாக்கப்பட்டது. இந்த கிடங்குகளில் நெல் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் ரேசன் அரிசி முறைகேடாக கைமாற்றப்படுவதாக புகார் எழுந்தது.
இதுபோன்ற சம்பவங்களுக்கு தீர்வு காணும் வகையில் சேலம், நாமக்கல் உள்பட நுகர்ப்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து சேமிப்பு கிடங்குகளில் 2,900 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கிடங்குக்கு 3 அல்லது 4 காமிராக்கள் பொருத்தப்படுகிறது. இந்த பணிகள் ரூ.3.40 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது.