சங்ககிரி ஆகஸ்ட், 5
சேலம் மாவட்டம், சங்ககிரியில் பல்வேறு கட்சிகள் சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சங்ககிரியில் கொமதேக சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினவிழா அனுசரிக்கப்பட்டது. இதன் தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கி அலங்கரிக்கப்பட்ட தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் தெற்கு மாவட்ட செயலாளர் சரவணன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து பாமக சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மேலும் கட்சியின் கவுரவ தலைவர் மணி தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர்கள் அருள், சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட தலைவர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் செல்வகுமார், சங்ககிரி நகர செயலாளர் அய்யப்பன், எடப்பாடி நகர செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க..
http://www.vanakambharatham24x7news.in