சிவகங்கை அக், 29
சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தனபாலன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜீனு, வருவாய் கோட்டாட்சியா்கள் சுகிதா, பிரபாகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.