புதுக்கோட்டை அக், 26
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏனாதி கிராமத்தில் பெண் ஒருவர் வீடு கட்ட குழி தோண்டிய போது மண் பானையில் 63 கிராம் மதிப்பிலான 16 தங்க காசுகள் கிடைத்தன. இந்த தங்க காசுகள் அனைத்தும் முகலாயர் காலத்து அல்லது நவாப் காலத்து அரபு மொழி குறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் என்று ஆரம்பத்தில் கருதினர்.
ஆனால் தொல்லியல் துறையின் ஆய்வுக்கு பின் கிடைத்த வியப்பூட்டும் செய்தி என்னவென்றால் இந்த தங்க நாணயங்கள் 1300 ஆண்டுகள் பழமையான நாணயம் என்றும் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் இந்த அரபு நாட்டின் உமர் கலிமா பேரரசின் நாணயங்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தங்க நாணயங்களில் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது மூரசூலுல்லாஹ் என்ற இஸ்லாமியத்தின் திருக்கலிமா பொறிக்கப்பட்டுள்ளது.