தர்மபுரி அக், 26
தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை மற்றும் பழங்கள் விற்பனை நன்றாக நடக்கிறது. இந்த உழவர் சந்தைக்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அத்தகைய நேரங்களை பயன்படுத்தி காய்கறிகள், பழங்களை சிலர் திருடி சென்று விடும் சூழல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த தர்மபுரி உழவர் சந்தை மற்றும் மாவட்டத்தில் பிற பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் உழவர் சந்தைகளில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.