ஈரோடு அக், 22
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை ஆணையாளருமான பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நமக்கு நாமே திட்டம், ஜல்ஜீவன் மிஷன், அம்ருத், தூய்மைபாரத இயக்கம், பாதாள சாக்கடை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், இ-சேவை மையம், உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கூடுதல் ஆட்சியர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர்கள் சதீஷ்குமார், திவ்ய பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.