கடலூர் அக், 22
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 15 ம் தேதி முதல் மாநகராட்சிக்குட்பட்ட 15 அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும் 630 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு சென்ற கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், பள்ளிக்கூடங்களுக்கு தினசரி சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுகிறதா என ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர். அப்போது கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.