Spread the love

உத்தரகாண்ட் அக், 22

கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்பெற்ற திருத்தலங்கள் உள்ளன. இந்த 4 திருத்தலங்களையும் தரிசனம் செய்யும் ஆன்மிக பயணத்தை சார்தாம் யாத்திரை என்று அழைக்கிறார்கள். பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் கேதார்நாத், பத்ரிநாத் ஆலயங்களில் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி இந்த ஆண்டு தரிசனத்துக்காக அவர் நேற்று 2 நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்றார். டேராடூன் விமான நிலையத்தில் அவரை உத்தரகாண்ட் கவர்னர் குர்மீத் சிங், முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி அஜய் பட் ஆகியோர் வரவேற்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி டேராடூனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து அவர் கேதார்நாத் ஆலயத்துக்கு சென்றார். பிரதமர் மோடி வருகையையொட்டி கேதார்நாத் சிவாலயம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு அவர் சிறப்பு பூஜைகள் செய்தார். கேதார்நாத்தில் ஆதிசங்கரர் முக்தி அடைந்ததாக கூறப்படும் இடத்திலும் அவர் வழிபாடுகள் செய்தார். கேதார்நாத்-கவுரிகுண்ட் இடையே 7.9 கி.மீ. தொலைவில் அமைய இருக்கும் ரோப்கார் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கேதார்நாத்தில் சுமார் 3 மணி நேரம் அவர் இருந்தார். அதன் பிறகு அவர் பத்ரிநாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் ஆலயத் திருப்பணிகள் பற்றி ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *