புதுச்சேரி அக், 21
புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகையாக ரூ.3 ஆயிரத்து 500 வழங்கக்கோரி தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரபிரியங்காவின் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக ஏ.ஐ.டி.யு.சி. அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இதற்காக அவர்கள் நேற்று காலை மிஷன் வீதி மாதா கோவில் அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து சட்டசபையை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். தொடர்ந்து ஏ.ஐ.டி.யு.சி. செயல் தலைவர் அபிசேகம், பொதுச்செயலாளர் சேதுசெல்வம், செயலாளர்கள் தயாளன், முத்துராமன், துணைத்தலைவர் சேகர் மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள்.